குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப் பயின்று வருவது; |
| `குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்' | | | - தொ. பொ. 533 | | |
என்ப ஆகலின். வரலாறு : |
| `உறுபுயல் எழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை பொதிதளை அவிழ' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
சித்திரவண்ணம் நெட்டெழுத்தும் குற்றெழுத்துமாய் வரும்; |
| `சித்திரவண்ணம், நெடியவும் குறியவும் ஒத்துடன் வருமே' | | | - தொ. பொ. 534 | | |
என்ப ஆகலின். |
வரலாறு : |
| `ஓரூர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார்' | | | - குறுந். 231 | | |
என வரும். |
மெல்லிசைவண்ணம் மெல்லெழுத்து மிக்கு வருவது; |
| நலிபுவண்ணம் ஆய்தம் பயின்று வரும்; `நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்' | | | - தொ. பொ. 535 | | |
என்ப ஆகலின். வரலாறு : |
| அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்' | | | - குறள் 178 | | |
என வரும். |