பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

29

 

9

நேர்நேர் ஒன்றல், நிரைநேர் ஒன்றல்என்று
ஆயிரு தளையும் அசுவற்கு இசைதலும்,
வெண்சீர் ஒன்றல் இயற்சீர் விகற்பம்என்று
அவ்விரு தளையும் வெள்ளைக்கு அமைதலும்,
நிரைஈற்று உரிச்சீர் ஒன்றலும் உறழ்தலும்
வரையாது வருதல் வஞ்சிக்கு வருதலும்,
வெண்சீர் விகற்பம் கலித்தளை ஆதலும்,
பண்பினின் வழாஅப் பாங்கின என்ப.
 
     

11

குறள்ஒரு பந்தம், இருதளை சிந்தாம்,
முத்தளை அளவடி நால்தளை நெடிலடி,
ஐந்தளை முதலா எழுதளை காறும்
வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப.
 
     

12

வெண்பா அகவல் கலிநேர் அடியும்,
ஒண்பா வஞ்சி குறள்சிந்து அடியும்,
பாஇனம் எல்லாப் பாதமும் பெறுமே.
 
    &nbs;
16 சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்,
சொல்லி நிறுத்தசெந் தொடையும், நேர்அடியின்
முழுவதும் ஒருசொல் வரின்அஃது இரட்டையும்......
 
     
20 குறளே, நேரிசை, இன்னிசை, பஃறொடை,
சிந்தியல், என அஃது ஐந்துஎன மொழிப.
 
     
21 ஈரடி யான்வரின் குறள்;அஃது இரண்டாய்ச்
சீரிய வான்தனிச் சொல்இடை சிவணி,
இருவிகற் பானும் ஒருவிகற் பானும்,
செப்பல் ஓசையின் சிதையா தாகி,
அத்திறம் வரின்நே ரிசை; அடி நான்காய்,
ஒன்றும் பலவும் விகற்பாய், தனிச்சொல்
இன்றி நடப்பின், இன்னிசை; அடிபல
துன்னின் பஃறொடை, நேரிசை இன்னிசை
அன்னவாய், மூன்றடி யான்வரின் சிந்தியல்
வெண்பா ஆதலும், விதிஎனப் படுமே.