பக்கம் எண் :

290

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

ஏந்திசைவண்ணம் இருபது :

  குறில் அகவல் ஏந்திசைவண்ணம்,
நெடில் அகவல் ஏந்திசைவண்ணம்,
வலி அகவல் ஏந்திசைவண்ணம்,
மெலி அகவல் ஏந்திசைவண்ணம்,
இடை அகவல் ஏந்திசைவண்ணம்
 
     
எனவும்,
  குறில் ஒழுகல் ஏந்திசைவண்ணம்,
நெடில் ஒழுகல் ஏந்திசைவண்ணம்,
வலி ஒழுகல் ஏந்திசைவண்ணம்,
மெலி ஒழுகல் ஏந்திசைவண்ணம்,
இடை ஒழுகல் ஏந்திசைவண்ணம்
 
     
எனவும்,
  குறில் வல்லிசை ஏந்திசைவண்ணம்,
நெடில் வல்லிசை ஏந்திசைவண்ணம்,
வலி வல்லிசை ஏந்திசைவண்ணம்,
மெலி வல்லிசை ஏந்திசைவண்ணம்,
இடை வல்லிசை ஏந்திசைவண்ணம்
 
     
எனவும்,
  குறில் மெல்லிசை ஏந்திசைவண்ணம்,
நெடில் மெல்லிசை ஏந்திசைவண்ணம்,
வலி மெல்லிசை ஏந்திசைவண்ணம்,
மெலி மெல்லிசை ஏந்திசைவண்ணம்,
இடை மெல்லிசை ஏந்திசைவண்ணம்
 
     
எனவும் வரும். இவை ஏந்திசைவண்ணம் இருபதாம்.

     இவை மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும் ஓங்கிப்
பறக்கும் புட் போலவும் வரும் எனக் கொள்க.