பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 48

291

 

அடுக்கிசைவண்ணம் இருபது :

  குறில் அகவல் அடுக்கிசைவண்ணம்,
நெடில் அகவல் அடுக்கிசைவண்ணம்,
வலி அகவல் அடுக்கிசைவண்ணம்,
மெலி அகவல் அடுக்கிசைவண்ணம்,
இடை அகவல் அடுக்கிசைவண்ணம்
 
     
எனவும்,
  குறில் ஒழுகல் அடுக்கிசைவண்ணம்,
நெடில் ஒழுகல் அடுக்கிசைவண்ணம்,
வலி ஒழுகல் அடுக்கிசைவண்ணம்,
மெலி ஒழுகல் அடுக்கிசைவண்ணம்,
இடை ஒழுகல் அடுக்கிசைவண்ணம்,
 
     
எனவும்
  குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம்,
நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம்,
வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம்,
மெலி வல்லிசை அடுக்கிசை வண்ணம்,
இடை வல்லிசை அடுக்கிசை வண்ணம்
 
     
எனவும்
  குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம்,
நெடில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம்,
வலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம்,
மெலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம்,
இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம்
 
     
எனவும் அடுக்கிசை வண்ணம் இருபதாம்.

     அவை ஒவ்வா நிலத்தில் பண்டி உருண்டாற்போலவும், நாரை
இரைந்தாற்போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் வரும்.