|
சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது அகவல் வண்ணம்; நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது ஒழுகல் வண்ணம்; தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கல்மேல் கல்லுருட்டினாற் போலவும் வருவது வல்லிசை வண்ணம்; அன்ன நடையும் தண்ணம் பறையும் போலவும் மண்மேல் நடந்தாற் போலவும் வருவது மெல்லிசை வண்ணம்; இவை தொழில்வகையால் ஒருபுடை ஒப்புமையுடையன. இவை நூறு வண்ணமும் தம்முள் மயங்கி வரினும் மிக்கதனால் பெயர் கொடுத்து வழங்கப்படும். இவ்வண்ணங்களுள் பெரும்பாலானவற்றிற்கு யாப்பருங்கல விருத்தியில் 95-ஆம் நூற்பா உரையில் எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றுள்ளன. |
ஒத்த நூற்பாக்கள் |
| `மெல்லிசை ஏந்தல் ஒழுகுருட் டெண்ணொரு வேமுடுகு வல்லியல் பாவகப் பாட்டு நலிவகைப் போடியைபு சொல்லிய சித்திரம் தாவு புறப்பாட் டளபெடையும் வல்லிசை தூங்கல் நெடுஞ்சீர் குறுஞ்சீர் எனஇவையே.' | | | - வீ. சோ. 142 | | |
| `வண்ணம் என்ப வலிமெலி இடைஒழுகு எண்உருட்டு எனமுடுகு ஏந்தல் தூங்கல் அகைப்புப் புறப்பாட்டு அகப்பாட்டு அளபு பாவு நலிவு தாவு ஒரூஉ குறில்நெடில் சித்திரம் கூறுபாடு இருபதே.,' | | | - தொ. வி. 250 | | |
| `எதுகை முதலடி எல்லாம் வல்லினம் மிகுவன வல்லிசை யாம்; விளம் பிடினே.' | |
| - மு. வீ. யா. ஒ. 22 | |
| `மெல்லினம் மிகுவன மெல்லிசை ஆகும்.' | | | - 23 | | |
| `இடையினம் மிகுவன இடையிசை எனலே.' | | | - 24 | | |
| `விரவி மூவினமும் மிகுவன ஒழுகிசை.' | | | - 25 | | |