பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 48

295

 
  `எண்ணி வருவன எண்எனப் படுமே.'
 

- மு. வீ. யா. ஒ. 26

  `உருட்டாம் அராகத் தொடுவரு வனவே.'
 

- மு. வீ. யா. ஒ. 27

  `அராகமாய் வருவது அன்றியும் அடிமுதல்
ஈறுதோன் றாமல் தொடர்ந்தெ ழும்பிய
அடியான் வருவன முடுகா கும்பே,'
 

- மு. வீ. யா. ஒ. 28

  `நேரிறு உரிச்சீர் மிகவந் தேந்திய
ஓசையின் வருவன ஏந்திசை ஆகும்.'
 

- மு. வீ. யா. ஒ. 29

  `நிரையிறு உரிச்சீர் மிக்குத் தூங்கிய
ஓசையின் வருவன தூங்கிசை ஆகும்'
 

- மு. வீ. யா. ஒ. 30

  `அறுத்தறுத் தியல்வன அகைப்பா கும்மே.'
 

- மு. வீ. யா. ஒ. 31

  `முடிந்தது போல முடியாது வருவன
புறப்பாட் டென்மனார் புலமை யோரே.'
 

- மு. வீ. யா. ஒ. 32

  `முடியாதது போல முடிந்து வருவன
அகப்பாட்டு என்மனார் அறிந்திசி னோரே,'
 

- மு. வீ. யா. ஒ. 33

  `அடிதொறும் அளபெடை எதுகை ஆக
வருவன அளபாம் வகுக்குங் காலே.'
 

- மு. வீ. யா. ஒ. 34

  `நூற்பா உரைத்து வருவன பாவே.'
 

- மு. வீ. யா. ஒ. 35

  அடிதொறும் எதுகை ஆக ஆய்தம்
கொடுவரல் நலிபாம் குறிக்குங் காலே.'
 

- மு. வீ. யா. ஒ. 36

  `ஓரடிக்கு ஓரடி மத்தியில் விட்டடி
எதுகை ஒன்றின் இயல்வன தாவே.'
 

- மு. வீ. யா. ஒ. 37

  `அடிதொறும் ஒன்றாத் தொடையொடு வருவன
ஒரூஉ எனப்பெயர் உரைக்கப் படுமே.'
 

- மு. வீ. யா. ஒ. 38

  `குற்றெழுத் தியைந்து வருவன குறுஞ்சீர்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.'
 

- மு. வீ. யா. ஒ. 39

  `நெட்டெழுத் தியைந்து வருவன நெடுஞ்சீர்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.'
 

- மு. வீ. யா. ஒ. 40

  `நெடிலும் குறிலும் நீங்காது வருவன
சித்திரம் என்மனார் தெளிந்திசி னோரே.'
 

- மு. வீ. யா. ஒ. 41