|
புனைந்துறை ஆமாறு |
758, | உரைக்கப் படும்பொருட்கு ஒத்தவை எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ; அவைதாம், பெரிதினைச் சுருக்கலும் சிறிதினைப் பெருக்கலும் எனஇரண்டு ஆகும் என்மனார் புலவர். | | | | | |
இது புனைந்துரை ஆமாறு கூறுகின்றது. இ-ள் : புலவனால் கூறப்படும் பொருட்குப் பொருந்திய புனைந்துரை எல்லாம் புகழ்ச்சியான் மிக்க புனைந்துரையாம். அப்புனைந்துரைதான், பெரிது ஒன்றனைச் சுருக்கிச் சொல்லுதலும், சிறிது ஒன்றனைப் பெருக்கிச் சொல்லுதலும் என இரண்டு வகைப்படும் என்று கூறுவர் அறிவுடையோர் என்றவாறு. வரலாறு : |
| `அடையார்பூங் கோதையாட் கல்குலும் தோன்றும் ; புடையார் வனமுலையும் தோன்றும் ; - இடையாதும் கண்டுகொள்ளா தாயுனுங் காரிகை நீர்மையாட் குண்டாக வேண்டும், நுசுப்பு' | | | - யா. கா. 45 மே. | | |
இது பெரியதனைச் சுருக்கிச் சொல்லியது. |
[இடையின் நுண்மை கூறியவாறு] |
| `அவாப்போல் அகன்றதன் அல்குல்மேல் சான்றோர் உசாப்போல உண்டே மருங்குல் ;- உசாவினைப் `பேதைக் குரைப்பான் பிழைப்பின் பெருகினவே கோதைக்கொம் பன்னாள் குயம்.' | | | - யா. கா. 45 மே. | | |
[அல்குல், குயம் இவை பற்றிய வருணனை.] |
இது சிறியதனைப் பெருக்கிச் சொல்லியது. பிறவும் அன்ன | (49) |