பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 50

297

 

ஒத்த நூற்பா

  `உரைக்கப் படுபொருட்கு ஒத்தவை எல்லாம்
புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும்.'
 
    49
ஆனந்தம் ஆமாறு
759. நிறுவிய பொருளுக்கு இறுதியைத் தருவது
அறிய வேண்டா ஆனந்தம்; அதுதான்,
இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே
இயற்பாடு இல்லா எழுத்துஆ னந்தமும்,
அப்பெயர் மருங்கின் மங்கலம் அல்லாத்
தொழிற்சொல் புணர்ப்பின் சொல்ஆ னந்தமும்
எனவிரண்டு ஆகும்; இவைபுண ராமல்
நினைவதை யாப்புஎன நிகழ்த்துவர் புலவர்.
 
     
இஃது ஆனந்தம் என்பதூஉம் அதன் பகுதியும் கூறுகின்றது.

     இ-ள் : நிலைபெற்ற பொருளுக்கு அழிவினைப் பயப்பது ஆராயத்தகாத
ஆனந்தமாம். அவ்வானந்தந்தான் இயற்பெயர்ப்பால் அளபெடை கூறின் பொருத்தம்
இல்லாத எழுத்தானந்தமும், அவ்வியற்பெயர்ப்பால் மங்கலம் ஒழிந்த தொழிற்சொல்லைச்
செப்பின் சொல்லானந்தமும் என இரண்டு வகைப்படும் ; இவ்விருவகை ஆனந்தமும்
படாமல் நினைந்து சொல்லும் செய்யுளைச் செய்யுள் என்று சொல்லுவர் அறிவுடையோர்
என்றவாறு.
     வரலாறு :
  `ஆழி இழைப்பப் பகல்போம் ; இரவெல்லாம்
தோழி துணையாத் துயர்தீரும் ; -- வாழி
நறுமாலை தாராய், திரையவோஒ !' என்னும் ;
செறுமாலை சென்றடையும் போழ்து.'
 
 

 - யா. கா. 46 மே