30 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | 24 | நேரிசை, இணைக்குறள், நிலைமண் டிலமே, அடிமறி மண்டிலம் எனநான்கு அகவல். | | | | | | 25 | மனப்படும் அடி, முதல் இடைஈறு ஆயின் அடிமறி மண்டில ஆசிரியம் ஆதலும், நடைதெரி புலவர் நாடினர் கொளலே. | | | | | | 26 | எருத்தடி குன்றியும், இடைஇடை குன்றியும், இவற்றோடு இடைமடக்கு ஆகியும், நான்கடி அவற்றான் நடப்பின் அதன்துறை ஆதலும், கழிநெடில் அடிநான்கு ஒத்துஇறின் அகவல் விருத்தம் ஆதலும், விதிஎனப் படுமே. | | | | | | 29 | தரவுஒன் றாகித் தாழிசை மூன்றாய்த் தனிச்சொல் இடைநடந்து சுரிதகம் தழுவி நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையும், ஆங்கதன் இடையே அளவடி சிந்தடி பாங்குஅமை குறள்அடி படுநீர்த் திரைபோல் ஓய்ந்து ஓய்ந்து உற்றிடு மாயின்அன்ன அப்போ தரங்க ஒத்தா ழிசையும், அசையடி மிசைத்தாய் அராகம் அவற்றொடும் இசைவுறின் வண்ணக ஒத்தாழி சையும், வேற்றுத்தளை தட்டும் வெண்பா இயைந்தும் ஈற்றடி முச்சீ ராய்இறின் முறையே வெண்கலிப் பாவும், கலிவெண் பாவும், தரவே தரவிணை தாழிசை சிலபல மரபான் இயன்றவும் மயங்கிவந் தனவும் அவ்வப் பெயரான் அமைந்தகொச் சகமும், ஆகும் என்ப அறிந்திசி னாரே. | | | | | | 32 | பாங்குஅமை சிந்தடி நான்காய் நடப்பது வஞ்சி விருத்தம் ஆதலும் மரபே. | | | | | | | | |
|
|