| செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள் | 307 | | | | யாப்புப்பற்றிய சில செய்திகள் | தொல்காப்பியத்தின் பின்னர்த் தமிழகத்தில் தோன்றிய பல யாப்பு நூல்களும் பாக்கள் நான்களையும் தாழிசை, துறை, விருத்தம் என்ற மூன்று இனங்களாகப் பிரித்து விரித்தன என்பதும், அவற்றை அடியொற்றி வரையப்பட்ட யாப்பருங்கலம், பாப்பருங்கலக் காரிகை இவற்றை அடியொற்றியே இலக்கண விளக்கச் செய்யுளியல் முதலியன தோன்றின என்பதும் முன்னுரையில் கூறப்பட்டுள்ளன. இவற்றில் காணப்பெறாத சில செய்திகள் வீரசோழியத்துள்ளும் அதன் உரையுள்ளும் காணப்படுகின்றன. அவற்றையும் அறிதல் இன்றியமையாததாகும். வீரசோழியம் ஆசிரியச் சீராகிய இயற்சீரை முதற்சீர் என்றும், வெண்சீரை இடைச்சீர் என்றும், வஞ்சிச்சீரைக் கடைச்சீர் என்றும் குறிப்பிடுகிறது. குறளடியை ஆகாயஅடி எனவும், சிந்தடியைக் காற்றடி எனவும், அளவடியை நெருப்படி எனவும், நெடிலடியை நீரடி எனவும், கழிநெடிலடியை மண்ணடி எனவும் பூதங்களின் பெயர்களை அடியொற்றிப் பெயரிட்டுள்ளது. செய்யுள் எல்லாம் பத்தியம் கத்தியம் என்று இருவகைப்படும் எனவும் பத்தியமாவது பாதங்களால் நடைபெறுவது எனவும், கத்தியமாவது கட்டுரைப் போலியும் செய்யுட் போலியும் என இருவகைப்படும்; அவையாவன - யானைத் தொழில் முதலாயின கட்டுரைப் போலியும் ஒருபோகு முதலாயின செய்யுட் போலியும் ஆம் எனவும் குறிப்பிடுகிறது. மிக்க சொல்லும் மிக்க புகழும் மிக்க ஓசையும் உடைத்தாகலின் நேரிசை ஆசிரியப்பா எனவும், அனைத்தடியும் ஒத்துநின்று இவ்வாறே பொருள்படுதலான் நிலைமண்டில ஆசிரியப்பா எனவும் பெயரிடுவது காரணக்குறி என்பது விளக்கப்பட்டுள்ளது. அம்போதரங்கத்தின் பரியாயப் பெயராவதோடு தாழிசைக்கும் எண் என்பது பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவு-கொச்சகக்கலிப்பாவில் அருகி ஒன்றிரண்டு விளச்சீர் வரின் | |
|
|
|