பக்கம் எண் :

310

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இவ்வாறு குறிப்பிடும் வீரசோழியம் பின் வடமொழி மரபைப் பெரிதும் ஒட்டி
இலகு, குரு, பிரஸ்தாரம் முதலிய ஆறு தெளிவு, சந்தங்களைப் பிரஸ்தரித்துக் காட்டுதல்,
நட்டம், உத்திட்டம் என்பனவற்று இலக்கணம், சந்தத்தொகை, அளவு என்பனவற்றோடு
வண்ணங்களையும் விளக்கி யாப்புப் படலத்தை முடிக்கிறது.

     யாப்பருங்கல விருத்தியின் 95 ஆம் நூற்பாவுரையில் பல அருஞ் செய்திகள்
குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஈண்டைக்கு இயைவனவாகிய ஒருசில செய்திகளைச்
சுட்டுவோம்.

     வழு என்பது குற்றம். அது நான்கு வகைப்படும். எழுத்து வழுவும், சொல்வழுவும்,
பொருள் வழுவும், யாப்பு வழுவும் என. அவற்றுள் எழுத்து வழுவாவது
எழுத்ததிகாரத்தோடு மாறு கொள்வது.

வரலாறு :
  `வெறிகமழ் தண்சிலம்பில் வேட்டமே யன்றிப்
பிறிதும் குறையுடையான் போலும் -- செறிதொடி
தேமான் இதணத்தேம் நாமாக நம்புனத்தே
வாமான்பின் வந்த மகன்.'
 
என இதனுள் தேமா எனற்பாலதனைத் `தேமான்ழு என னகரவொற்றுக் கொடுத்தமையால்
எழுத்து வழுவாயிற்று. என்னை?
  `முன்னிலை நெடிலும் ஆவும் மாவும்
ன - மிகப் புணரும் மயங்குதிணை யான'
 
என்றாராகலின்
 

சொல்வழுவாவது சொல்லதிகாரத்தோடு மாறுகொள்வது. என்னை?