பக்கம் எண் :

செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள்

311

 
  `சொல்லின் வழுவே சொல்லோத்து மரபில்
சொல்லிய குற்றம் தோன்ற லாறே'
 
     
என்றாராகலின்.

     வரலாறு :
  `இசையெல்லாம் கொட்ட எழில்தானை ஊர்ந்து
வசையிலா மன்னர்வந் தேத்த -- இசையும்
அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான்
கொடிமதில் கோழியார் கோ'
 
     
இதனுள், `இசையெல்லாம் ஆர்ப்ப' எனவும், `எழில்தானை நாப்பண்' எனவும், `அடிசில்
அயின்று' எனவும், `அணி அணிந்து போந்தான்' எனவும் இவ்வாறு பொதுவினால்
எடுத்துக் கொண்டு பொதுவினால் முடித்தற்பாலனவற்றைப் பொதுப் பெயரால் எடுத்துக்
கொண்டு சிறப்பு வினையால் ஒன்றற்கே உரிய சொல் புணர்த்தமையான் சொல் வழு
ஆயிற்று. என்னை?
  `வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினைகிளவார்'  
 

- தொ. சொ. 46

 
எனவும்,
  `வேறுவினை யுடைய பொதுவினை கிளப்பப்
பொதுவினை உடைய வேற்றுமை உண்டோ'
 
     
எனவும் கூறினாராகலின்.

     பொருள் வழுவாவது பொருளதிகாரத்தோடு மாறுகொள்வது. என்னை?
  `பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே'  
     
என்றாராகலின்.

     வரலாறு :
  `முன்னும் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் அத்திசையே
இன்னும் தொழத்தோன்றிற்று ஈதேகாண் -- மன்னும்
பொருகளிமால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போல்
பெருகொளியான் மிக்க பிறை'
 
     
இது நாணநாட்டம்.