| |
| | `பண்டிப் புனத்துப் பகலிடத் தேனனுள் கண்டிக் களிற்றை அறிவன்மன் -- தொண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் உதிரம் உடைத்திதன் கோடுழு | | | | | | |
| இது நடுங்கநாட்டம். இவையிரண்டும் பொருளதிகாரத்தோடு மாறு கொண்டன. என்னை? |
| | `நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி காணுங் காலைத் தலைமகள் தேஎத்துழு | | | | | | |
| என்றாராகலின். |
| | `வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும் ஊரன் செய்த கேண்மை தேரை வாலினும் பெரிதா கின்றேழு | | | | | |
இதுவும் பொருளின்மையால் பொருள் வழுவாயிற்று. யாப்பு வழுவாவது, யாப்பதிகாரத்தோடு மாறுகொள்வது. என்னை? |
| | `யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம் கோப்ப வாராக் கோவைத் தாகும்ழு | | | | | | |
என்றாராகலின். வரலாறு : |
| | `குமண ! வாழி ! குமண ! உமணருப்பில் தேய்கநின் பகையே; யான்சில பெருமை வேண்டி வந்தேன்; நீநின் பெருமை வேண்டின் தாழு | | | | | | |
இப்பாட்டு முதல் எடுத்துக்கொண்ட ஓசையில் கெட்டுப் பின் பரவிக் கட்டுரையால் வந்தமையால் யாப்புவழு. பிறவும் அன்ன ... |