பக்கம் எண் :

செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள்

313

 
  `பிரிபொருள் தொடர்மொழி முரண்மொழி எனாஅ
ஒருபொருள் மொழியே ஐயமொழி எனாஅ
முறைபிறழ் வைப்பே சொல்வழு எனாஅ
யாப்பின் வழுவே நடைவழு எனாஅப்
பொருளின் வழுவே புணர்ப்புவழு எனாஅக்
கலையொடு மலைவே காலமலைவு எனாஅ
உலக மலைவே இடமலைவு எனாஅ
மேற்கோள் மலைவே ஏதுமலைவு எனாஅ
எடுத்துரை மலைவே நூல்மலைவு எனாஅ
இருநான்கு அடுத்த ஈரைம் பிறழ்வும்
உய்த்துணர் மொழியே ஒட்டுப்பிரி மொழியே
பிறிதுபடு மொழியே பிசிபடு மொழியே
உத்தி மறுதலை எனவரூஉம் இவையும்
இடக்கர் இசையவும் இடக்கர்ப் பொருளவும்
இடக்கர்ப் படவரூஉம் சந்தி இசையவும்
இன்னா இசையவும் எனஎடுத் திவற்றோடு
முன்னாம் கூறிய பிறழ்வும் தொகைஇ
ஏழுடை இருபான் ஊனம் நீக்குபு
பாட வல்லோன் கவிஞன்; அன்றேல்
அடங்காப் புதல்வற் பயந்த பரத்தையின்
புறஞ்சொல் பெறூஉம் புலவ ரானே.'
 
     

(இவற்றுள் சில இந்நூல் எழுத்வப்படலத்தும், சில சொற் படலத்தும், சில
அணியியலுள்ளும் விளக்கப்பட்டுள்ளன.)

சந்தமும், தாண்டகமும் :
     நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த
இருபத்துமூன்றடியானும் வந்து தம்முள் ஒத்தும், குருவும் லகுவும் ஒத்தும் வந்தன
அளவியற் சந்தம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழிச்சந்தம்.