| செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள் | 315 | | | எல்லா அடிகளும் எழுத்து ஒத்துவரும் கலி கட்டளைக்கலி எனவும், ஒவ்வாது வருவது கலம்பகக்கலி எனவும், எல்லா அடிகளும் எழுத்து ஒத்துவரும் ஆசிரியமும், வஞ்சியும் முறையே கட்டளை ஆசிரியம், கட்டளை வஞ்சி எனவும், ஒவ்வாது வருவன கலம்பக ஆசிரியம், கலம்பக வஞ்சி எனவும் வழங்கப்பெறும். அடிதோறும் சீர் ஒத்து ஓரடியுள் ஓரெழுத்துக் குறைந்து வந்தமை நிகர்த்து எனவும், ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீர் ஒத்து வந்தமை புரிக்கு எனவும், ஓரடியில் இரண்டெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமை சுராட்டு எனவும், முதலடியும் நான்காமடியும் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் எழுத்து மிக்கு நாலடியும் சீர் ஒத்து வந்தமை பவமத்திமம் எனவும், முதலடியும், ஈற்றடியும் எழுத்து மிக்கு நடுவிரண்டடியும் எழுத்துக் குறைந்து நாலடியும் சீர் ஒத்து வந்தமை பிபீலிகா மத்திமம் எனவும், முதலிரண்டடியும் எழுத்துக் குறைந்து கடையிரண்டடியும் எழுத்து மிக்கு நான்கடியும் சீர் ஒத்து வந்தமை பாதிச் சமவிருத்தம் எனவும், முதலிரண்டியும் எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து நான்கடியும் சீர் ஒத்து வந்தமை பாதிச் சம செய்யுள் எனவும் கூறப்படும். இவை யாப்பருங்கல விருத்தியில் கூறப்பட்டுள்ள செய்திகளாம். தொல்காப்பியனார் குறிப்பிட்ட அறுவகைப் பாக்களுள் பரிபாடல் இக்காலத்தில் அருகிவிட்டது. அவர் குறிப்பிட்ட வெண்பா ஆசிரியப்பாக்கள் பல பகுப்புக்களாகப் பிற்காலத்தில் பகுக்கப்பட்டுவிட்டன. அவர் குறிப்பிட்ட உறழ்கலி பிற்காலத்தில் வழக்கிழந்துவிட்டது. அவர் பாவினங்களையே குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் குறள்வெண்பாவுக்கு வெண்செந்துறை குறட்டாழிசை என்ற இனங்களும் நால்வகைப் பாக்களுக்கும் தாழிசைதுறை விருத்தம் என்ற இனங்களும் தோன்றலாயின. இவ்வினங்களின் யாப்பிலக்கணத்திற்கும் இவற்றின் பெயர்களுக்கும் | |
|
|
|