பக்கம் எண் :

318

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     கலித்தாழிசையாவது அடிவரையறை சீர்வரையறை இன்றிக் கடையடி நீண்டு
வருவதாகும். கலித்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் வரலாம்.
ஒத்தாழிசைக்கலி முதலியவற்றின் உறுப்புக்களாகிய தாழிசைகள் சமமான அடிகளாக
இருத்தலின் அவற்றைக் கலித்தாழிசை என்று கூறாமல் அடிவரையறை மிக்கும் ஒத்தும்
வந்த ஆசிரியத் தாழிசை என்று கூறவேண்டி வரும்.

     கலித்துறை என்பது தளை வரையறை இன்றி ஒரே விகற்பம் உடைய சமமான
நான்கடிப் பாடல். கட்டளைக்கலித்துறை என்பது,
  `அடிஅடி தோறும் ஐஞ்சீ ராகி
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையா
கடைஒரு சீரும் விளங்கா யாகி
நேர்பதி னாறே நிரைபதி னேழென்று
ஓதினர் கலித்துறை ஓரடிக்கு எழுத்தேழு
 
     
என்ற இலக்கணத்ததாய் நான்கடியும் ஒரே விகற்பமுடையதாய் அமைந்து பெரும்பாலும்
`ஏழு என்னும் எழுத்தான் முடிவது.

     கலி விருத்தம் என்பது ஒரே விகற்பமுடைய அளவடிகள் நான்கு அமைந்த
பாடலாகும். தரவு கொச்சகமும் இது போன்ற நான்கடிப் பாடலாகும். அது
காய்ச்சீர்களானாவது என்ற வேறுபாடு கோடல்வேண்டும்.

     வஞ்சித்தாழிசை என்பது ஒரே விகற்பமுடைய குறளடிகள் நான்கு ஒரு
பொருள்மேல் மூன்றடுக்கி வருவது. அப்பாடல் தனியே வரின் வஞ்சித்துறை. வஞ்சி
விருத்தம் என்பது ஒரே விகற்பமுடைய சிந்தடி நான்காய்ச் சீர்தளை முதலிய வரையறை
இன்றி அமைவது.

     இவற்றை நோக்கக் கீழ்க்கண்டவாறு இவற்றின் இலக்கணங்களை வரையறை
செய்து கொள்ளும் நிலையில் உள்ளேம்.