| செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள் | 319 | | | இரண்டடிகள் சமமாகவரின் :- 1. வெண்செந்துறை. 2. குறட்டாழிசையின் ஒருவகை. இரண்டடிகள் கடையடி நீண்டுவரின் :- கலித்தாழிசை. இரண்டடிகள் கடையடி குறைந்துவரின் :- குறட்டாழிசையின் ஒருவகை. நாற்சீரடி மூன்று சமமாகவரின் :- 1. ஆசிரியத்தாழிசை. 2. நிலைமண்டில ஆசிரியப்பா. நாற்சீரடி மூன்றடிகளில் கடையடி நீண்டுவரின் :- கலித்தாழிசை. நாற்சீரடி மூன்றடிகளில் கடையடி குறைந்துவரின் :- வெண்டாழிசை. நாற்சீரடி நான்கு சமமாக வரின் :- 1. கலி விருத்தம். 2. தரவு கொச்சகக்கலிப்பா. 3. நிலைமண்டில ஆசிரியப்பா. ஐஞ்சீரடி நான்கு ஒரூஉத்தொடை பெற்றுவரின் :- வெளிவிருத்தம். ஐஞ்சீரடி நான்கு ஒரூஉத்தொடை இன்றி வரின் :- கலிநிலைத்துறை. ஐஞ்சீரடி நான்கு எழுத்தெண்ணிப் பாடப்படின் :- கட்டளைக்கலித்துறை. | |
|
|
|