பக்கம் எண் :

32

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  பேணிய பெருமை பெரும்பொருள் முடிபும்,
இரண்டடி இழிவும் இரட்டிமூன்று ஆக்கமும்
ஒன்றிய தாழிசை உறுதலும், உறுங்கால்
தரவில் சுருங்கல் தகுதிஎன்று உரைத்தலும்,
அளவடி முதலா அனைத்துஅடி யானும்
வருவது வண்ணகம், வருங்கால் சிறுமை
நாலடி, பெருமை நாலிரண்டு ஆகி,
நடத்தலும் நெறியென நாட்டினர் புலவர்.
 
     
39 வருக்கமும் நெடிலும் இனமும் வரினும்,
திறப்படும் எதுகையும் மோனையும் ஆதலும்,
உயிரும் யரலழ ஆசும் இடைஇட்டும்
இரண்டடி மூன்றாம் எழுத்துஒன்றி வரினும்
எதுகை ஆதலும், இரணத் தொடைக்கும்
கடையே கடையிணை பின்கடைக் கூழை
இடைப்புணர்ப்பு இசைதலும், இசையும் என்ப.
 
     
40 ........ஆகிய பொருண்மையின் அமைந்தநால் வகைமேல்
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்.
 
     
43 அசையும் சீரும் அடியும் எல்லாம்,
இசைய வருபொருள் இயைபு நோக்காது,
ஓசையே குறிக்கொண்டு, ஒடுங்கவும், விரியவும்,
அலகிடல் வகையுளி ஆகும் என்ப.
 
     
44 வாழ்த்து, மெய் வாழ்த்து இருபுற வாழ்த்துஎனப்
போற்றல் வேண்டும்; வசையும்அவ் வகைத்தே.
 
     
46 எழுத்துஅல் இசைஎன அசைசீர் ஆக
நிறைக்கப் படுதல் குறிப்பிசை என்ப.
 
     
47 ஒப்புஎனப் படுவது, ஓதிய செய்யுளுள்,
தப்பினும் ஒருபுடை சார்த்திமற்று அவற்றையும்,
செப்பிய பாவொடு, சேர்த்தனர் கொளலே.