| |
| ஒரே விகற்பமுடைய சமமான நான்கு அடிகள் :- |
| முச்சீர் பெறின் | - | வஞ்சி விருத்தம். | | நாற்சீர் பெறின் | - | கலி விருத்தம். | | ஐஞ்சீர் பெறின் | - | கலிநிலைத்துறை. | | ஆறுமுதலிய சீர்பெறின் | - | ஆசிரிய விருத்தம். | |
கட்டளைக் கலித்துறையும் தொடக்கத்தில் விருத்தம் என்றே வழங்கப்பெற்றமை நம்மாழ்வார் அருளிய திருவித்தம் முதலிய பெயர்களால் போதரும். விருத்த இலக்கணமே தெளிவாக உள்ளமையால் பிற்காலப் புலவர்கள் பெரும்பாலும் விருத்த யாப்பையே பயன்படுத்தினர் என்பதும் தாழிசை துறைகள் தெளிவில்லா இலக்கணத்தனவாதலின் அவற்றை அருகியே பயன்படுத்தினர் என்பதும் உணரப்படும். எடுத்துக்காட்டு வாயிலாக நோக்குவோம் : |
| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே' | | | | | | |
இது விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடையது எனக் கொள்ளின் வெண்செந்துறை; அங்ஙனம் கொள்ளாதொழியின் குறட்டாழிசை. |
| |
| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றென உம்பருள் அறிவார் உளர்.' | | | | | | |
| இது வெண்டாழிசை. |
| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றென உம்பருள் அறிவார் உளரோ இலரோ.' | | | | | | |
| இஃது ஆசிரயத்தாழிசை` |