பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

33

 

49

அவைதாம்,
பெரிதினைச் சுருக்கலும் சிறிதினைப் பெருக்கலும்
எனஇரண்டு ஆகும் என்மனார் புலவர்.
 
     

50

நிறுவிய பொருளுக்கு இறுதியைத் தருவது
அறிய வேண்டா ஆனந்தம்; அதுதான்,
இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே
இயற்பாடு இல்லா எழுத்துஆ னந்தமும்,
அப்பெயர் மருங்கின் மங்கலம் அல்லாத்
தொழிற்சொல் புணர்ப்பின் சொல்ஆ னந்தமும்,
எனஇரண்டு ஆகும்; இவைபுண ராமல்
நினைவதை யாப்புஎன நிகழ்த்துவர் புலவர்.
 
     

51

ஓரடி யானும், பலஅடி யானும்,
ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள்;
அவைதாம்,
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆகும் என்ப அறிந்திசி னோரே.