பக்கம் எண் :

   
 

செய்யுளியல் உரையில் காட்டப்படும்
மேற்கோள் நூற்பாக்கள்

5 தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே
அளபெடை அல்லாக் காலை ஆன.
 
 

- யாப். 3

 
11 இரண்டு முதலா எட்டுஈ றாகத்
திரண்ட சீரான் அடிமுடிவு உடைய
இறந்தன வந்து நிறைந்துஅடி முடியினும்
சிறந்த அல்ல செய்யுள் உள்ளே.
 
 

 - காக்கைபாடினியம்

 
19 வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்.
 
 

 - சங்க யாப்பு

 
  இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்.
 
 

 - சங்க யாப்பு

 
  வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்.
 
 

 - சங்க யாப்பு

 
23 நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும்
நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும்
ஆயிரு தளையும்ஒத்து ஆகிய அகவலும்
ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்றிவை
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப.
 
 
     
27 ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின்,
வெண்டளை தன்தளை என்றிரண்டு இயையின்
ஒன்றிய அகவல் துள்ளல்என்று ஓதுப;
தன்தளை பிறதளை என்றுஇவை அனைத்தும்
பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்.