பக்கம் எண் :

36

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
48 அவற்றுள், பா அ வண்ணம்,
சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும்.
 

 - தொல். பொ. 526

  தாஅவண்ணம், இடையிட்டு வந்த எதுகைத் தாகும்.
 

- 527

  வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும்.
 

- 528

  மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே.
 

- 529

  இயைபு வண்ணம் இடைஎழுத்து மிகுமே.
 

- 530

  அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்.
 

- 531

 நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்.
 

- 532

  குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்.
 

- 533

  சித்திரவண்ணம், நெடியவும் குறியவும் ஒத்துடன் வருமே.
 

- 534

  நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்.
 

- 535

  அகப்பாட்டுவண்ணம், முடியாத் தன்மையின் முடித்தல் மேற்றே.
 

- 536

  புறப்பாட்டுவண்ணம், முடிந்தது போன்று முடியா தாகும்.
 

- 537

  ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்.
 

- 538

  ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்.
 

- 539

  எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்.
 

- 540

  அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும்.
 

- 541

  தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.
 

- 542

  ஏந்தல்வண்ணம், சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்.
 

- 543

  உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்.
 

- 544

  முடுகுவண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே.
 

- 545