தோற்றுவாய் செய்த செய்யுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதனை விளங்கக் கூறும் இடத்து, மேல் சொல் ஓத்தினுள், |
| பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல சொல்லால் பொருட்குஇடன் ஆக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வது செய்யுள் | | | - இ. வி. 169 | | |
எனக் கூறிய இயல்பிற்றாகி எழுத்து முதலிய அறுவகை உறுப்பினையும் பொருத்தமுறத் தழுவிப் பாவும் பாவினமும் என இரு பகுதியை உடைத்தாம் என்றவாறு. |
| `மூவிரண்டு உறுப்பும் மேவரச் சிவணி' | | | | | |
எனவே, மேவரச் சிவணாதனவும் உள என்பதூஉம் பெற்றாம். அவை, எழுத்து ஓத்தினுள் கூறிய மாத்திரை வகையும், அகத்து ஓத்தினுள் கூறிய திணை முதலிய பன்னிரு வகையும் இவ்வோத்துள் கூறப்படும் வண்ணமும், அம்மை முதலிய வனப்பு எட்டும் அவை போல்வன பிறவுமாம் என்று உணர்க. |
(1) |
விளக்கம் |
| மேல் நிறுத்த முறையானே என்றது, `போக்குஅறு மரபின் பொருள்எனப் படுவது நோக்குஅறு வீடு நுவற்சிசெல் லாமையின் அறம்பொருள் இன்பம் ஆகும் அதுவே அகனும் புறனுமென்றுஆயிரு பாற்றாய் வகைபட வந்த அணிநலம் தழீஇச் செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே' | | | - இ.வி.பொ.2 | | |
என்ற நூற்பாவினை உட்கொண்டு சொற்றது. |