பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 1

39

 

 

செய்யுள் பொருட்கு இடன் ஆதல்,
`பொருட்குஇடன் செய்யுள் ஆதலின் அதனைத்
தெரிப்பதும் அதனது திறம்எனல் வரையார்'
 
 

- இ. வி. அணி. 2

 
என்பதனானும் அறியலாம். அகத்தோத்து - அகத்திணை இயல்.
 
     மாத்திரை வகை - செய்யுளில் ஓசைகுறித்து அளபெடை ஐகாரக் குறுக்கம்
ஒளகாரக்குறுக்கம் குற்றியலிகரம் குற்றியலுகரம் முதலியன அலகு பெறுங்கால் பெறும்
வேறுபாடுகள்;   இவை   போல்வன   மேவரச்   சிவணாதன.   திணை   முதலிய
பன்னிரண்டுமாவன - திணை கைகோள் கூற்று கேட்போர் இடன் காலம் பயன்
முன்னம் மெய்ப்பாடு எச்சம் திணைவகை துறை என்பன. இவை அகத்திணை இயலுள்
கூறப்பட்டன. (இ. வி. அக. 188) ஏனைய இவ்வோத்துள் கூறப்பட்டுள்ளன.
 

ஒத்த நூற்பாக்கள்

 

 

`மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
யாத்த சீரே அடியாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடைவகை எனாஅ
நோக்கே பாவே அளவியல் எனாஅத்
திணையே கைகோள் கூற்றுவகை எனாஅக்
கேட்போர் களனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறைவகை எனாஅ
மாட்டே வண்ணமோடு யாப்பியல் வகையின்
ஆறு தலையிட்ட அந்நூல் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபுஎனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே'.
 
 

- இ.வி.பொ.2

என்ற நூற்பாவினை உட்கொண்டு சொற்றது.