4 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | பிற்பட்டெழுந்த இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன யாப்பருங்கலக் காரிகை கூறும் கருத்துக்களை நூற்பா யாப்பில் சிற்சில மாற்றங்களோடு நுவல்வனவாம். பிற்காலத்து எழுந்த பலவகைச் சந்தவிருத்தங்கள், சிந்து, வண்ணங்கள், கும்மி முதலிய இசைப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் இவற்றிற்குத் தனியே இலக்கணம் வகுக்கும் நூல் எதுவும் பழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. வீரசோழியம் குறிப்பிடும் சந்தம் பற்றிய செய்திகளும் தெளிவாக இல்லை. இக்காலக் கவியரங்கங்களில் பலவகைப்பட்ட செய்யுள்கள் பாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் இலக்கியமாகக் கொண்டு வரையப்படவேண்டிய யாப்பிலக்கண நூல் ஒன்றும் தமிழ் மக்களுக்குத் தேவையாக உள்ளது. இந்நிலையில் இவ்விலக்கண விளக்கப் பொருளதிகாரத்தின் நான்காம் இயலாகிய செய்யுளியலை நோக்குவோம். பெயர் உணரப்பட்ட இடைக்கால யாப்பிலக்கண நூற்பாக்கள் பிற்சேர்க்கையாக அமைக்கப் பெற்றுள்ளன. | | | |
|
|