பக்கம் எண் :

40

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காய னார்வகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலில் தொகுத்து.ழு
 
     

 

`நாதம் முதலாக நல்லுறுப் பேழுமியைந்து
ஏதமில் தன்மையில் ஆசாம் - தாதுக்கள்
ஏழும் புணர்ந்த தியாக்கை எழுத்தாதி
ஏழும் புணர்ந்த தியாப்பு.ழு
 

 

`யாப்பெனப் படுவது யாதென வினவின்
தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.ழு
 
 

- நற்றத்தனார்

 

 

இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழியல் வரைப்பின் தாமினிது விளங்க
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே.ழு
 

- பல்காயனார்

 

`எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
இழுக்கா நடையது யாப்பெனப் படுமே.ழு
 

- யா. வி. 1

 

 

`கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணாளர்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாஇனம் கூறுவன் பல்லவத்தின்
சந்தம் மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே.ழு
 

- யா. கா. 1

 

`சிரைமுதல் யாப்புறச்சேருயிர்க்கு உடல்போல்
உரைமுதல் யாப்புற உணர்பொருட்கு உடலாச்
சிறப்பிற் செய்வன செய்யு ளாம்அவை
உறுப்பியல் மரபுமூன்று உரைப்ப விளங்கும்.ழு
 

- தொ. வி. 202

 

`எழுத்துஅசை சீர்தளை அடிதொடை ஆறும்
வழுத்திய செய்யுள் மருவுஉறுப்பு எனலேழு.
 

- தொ. வி. 203