பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 2

41

 

செய்யுள் உறுப்புக்களின் பெயர்க்காரணம்

 

711.

எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து
அசைத்துஇசை கோடலின் அசையே; அசைஇயைந்து
சீர்கொள நிற்றலின் சீரே; சீர்இரண்டு
தட்டு நிற்றலின் தளையே; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடிஇரண்டு
தொடுத்துமன் சேறலின் தொடையே; அத்தொடை
பாவி நடத்தலின் பாவே; பாஒத்து
இனமாய் வழங்கலின் இனம்எனப் படுமே.
 
     
இது மேற்கூறிய எழுத்து முதலிய எட்டற்கும் காரணக் குறி கூறும் முகத்தான் பொது
இலக்கணமும் அவற்றின் கிடக்கை முறையும் கூறுகின்றது.

     இதற்குப் பொருள் கூறுகின்றிலம்; பெரும்பான்மையும் சூத்திரத்தானே பொருள்
விளங்கக் கிடத்தலின்.

     மன் என்ற மிகையானே ஓரடிக் கண்ணவாகிய தொடைவிகற்பமும் கொள்க.
 

(2)

விளக்கம்

 
     மேற்கூறிய என்றது சென்ற நூற்பாவில் எழுத்து முதல் இனம் ஈறாக முறையாகக்
கூறியது.

     ஒலிஅணு வடிவு அமைக்கப்படும் வகையில் வரையறுக்கப்படுதலின் எழுத்து
எனப்பட்டது. எழுத்து ஒன்றோ பலவோ ஒலித்து வரையறுத்த ஓசை கோடலின் அசை;
அசை தனித்தோ இரண்டு முதலாக இணைந்தோ சீராக அமைதலின் சீர்; சீர் இரண்டு
நின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதல் அசை தளைந்து நிற்றலின் தளை;
தளைகள் தன்னிடம் பொருந்தி அடுத்து