42 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | வருமாறு நடப்பது அடி; அடியிரண்டோ சீர்களோ தொடுத்துக் கிடக்கும் முறை தொடை; தொடை பரவி நடக்கும் இயல்பினது பா; அவ்வப்பாவிற்கு இனமாதல்தன்மையொடு பொருந்தி நடத்தலின் இனம். எழுத்தினான் அசையும், அசையால் சீரும், சீரால் தளையும், தளையால் அடியும், அடியால் தொடையும், தொடையால் பாவும் பா இனமும், அமைதலின் அம்முறையே கூறப்பட்டன. ஓர் அடிக்கண்ணவாகிய தொடை விகற்பம் இணைமுதல் முற்று ஈறாய ஏழும், இரட்டைத்தொடை போல்வனவும் ஆம். | ஒத்த நூற்பாக்கள் | முழுதும் - யா. வி. யா. கா. முதல் நூற்பா மேற்கோள் 2 | எழுத்தின் இயல் | | அவற்றுள், எழுத்துமேல் கிளந்த இயல்பிற்று ஆகும். | | | | | | | | | இது நிறுத்த முறையானே, எழுத்து ஆமாறு மாட்டேற்றான் எய்துவிக்கின்றது. இ - ள்: மேற்கூறிய செய்யுள் உறுப்பு ஆறனுள் முதல் உறுப்பாகிய எழுத்து மேல் எழுத்து ஓத்தினுள் கூறிப்போந்த இயல்பினை உடைத்தாம் என்றவாறு. மேல் கூறிப்போந்த இயல்பு என்னை எனின், அகரம் முதல் ஒளகாரம் இறுவாய்ப் பன்னீரெழுத்தினையும் உயிர் என்றும், அவற்றுள் அ இ உ எ ஒ என்ற ஐந்தனையும் ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்றும், ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழனையும் ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்றும், ககரம் முதல் | |
|
|