செய்யுளியல் - நூற்பா எண் 3 | 43 | | செய்யுள் உறுப்புக்களின் பெயர்க்காரணம் | னகரம் இறுவாய்ப் பதினெண் எழுத்தினையும் அரை அளபு இசைக்கும் மெய் என்றும், அவற்றுள் கசட தபற என்னும் ஆறனையும் வல்லெழுத்து என்றும், ஙஞண நமன என்னும் ஆறனையும் மெல்லெழுத்து என்றும், யரல வழள என்னும் ஆறனையும் இடை எழுத்து என்றும், நாகியாது எஃகியாது வரகியாது கொக்கியாது குரங்கியாது தெள்கியாது என யகரம் வரக் குற்றுகரம் கெட்டு ஆண்டுத்தோன்றும் இகரமும் கேண்மியா சென்மியா என்னும் உரைஅசை இடைச்சொல் இகரமும் தன் அளவில் சுருங்கி அரை அளபு இசைக்கும் புணர்மொழிக் குற்றியலிகரமும் ஒருமொழிக் குற்றியலிகரமும் என்றும், நாகு எஃகு வரகு கொக்கு குரங்கு தெள்கு என ஈரெழுத்து ஒருமொழி இறுதிக்கண்ணும் ஐவகைத் தொடர்மொழி இறுதிக்கண்ணும் நின்ற வல்லெழுத்தை ஊர்ந்துவரும் உகரம் தன் அளவில் சுருங்கி அரை அளபு இசைக்கும் குற்றுகரம் என்றும், எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு எனக் குற்றெழுத்தின் முன்னர்த்தாய் உயிரொடு கூடிய வல்லெழுத்து ஆறன் மிசைத்தாய ஆய்தம் அரை அளபு இசைத்துவரும் ஆய்த எழுத்து என்றும், அகரம் முதலிய உயிரும் ககரம் முதலிய மெய்யும் கூடி ஓரளபும் ஈரளபுமாயே ஒலிக்கும் பன்னிருபதினெட்டு இருநூற்று ஒருபத்தாறனையும் உயிர்மெய் என்றும், வாஅகை ஈஇகை ஊஉகம் பேஎகன் தைஇயல் தோஒரை மௌஉவல் எனவும், | | | `இலாஅஅர்க்கு இல்லை தமர்' | | | - நாலடி 283 | | | | எனவும் நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்கு இனமாய் ஒத்த குற்றெழுத்துக்களோடும் அவற்றுள் ஐகாரமும் ஒளகாரமும் இகர உகரங்களோடும் கூடி மூன்று |
|
|
|