44 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | மாத்திரையும் ஒரோவழி நான்கு மாத்திரையுமாய் மொழி முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் பெரும்பாலும் அளபெடுக்கும் உயிர்அளபெடை ஏழ் என்றும், அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரைய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு எனக் குறில் இணைக்கீழும், மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு எனக்குறில் கீழும் ஙஞண நமன வயலள ஆய்தம் என்னும் பதினோரொற்றும் தம்மொடு தாம் சார்ந்து ஒரு மாத்திரையாய் மொழி இடைகடை என்னும் இரண்டு இடத்தும் அளபு எடுக்கும் ஒற்றளபெடை பதினொன்று என்றும், ஐப்பசி இடையன் தினை எனவும் ஒளவை எனவும் தம்மைச் சுட்டுதற்கண்ணும் அளபு எடுத்தற் கண்ணும் அல்லாதவழி வந்த ஐகார ஒளகாரங்கள் முறையே முதல் இடைகடை என்னும் மூன்று இடத்தும் மொழி முதற்கண்ணும் தம் அளவில் சுருங்கி ஓர் அளபு இசைக்கும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் என்றும், போன்ம், மருண்ம், வாழும்வளவன் என லகர ளகரங்கள் திரிந்த னகர ணகரங்களின் முன்னும் வருமொழி வகரம் மிசையும் நின்ற மகரம் தன் அளவில் சுருங்கிக் கால் மாத்திரையாய் இசைக்கும் மகரக்குறுக்கமாம் என்றும் கூறியவாறாம் என்க. | (3) | விளக்கம் | நிறுத்தமுறை - செய்யுளியல் முதல் நூற்பா. எழுத்தோத்தினுள், உயிர், குறில், நெடில், மெய், வல்லினம், மெல்லினம் இடையினம், இருவகைக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றள | |
|
|