இ-ள்: நேர் அசை என்றும் நிரை அசை என்றும் மேல் கூறிய அசை இரண்டு வகையினை உடைத்தாம் என்றவாறு. |
| (4) |
விளக்கம் |
நிறுத்த முறை - முதல் நூற்பா; அசைகளைக் கணக்கிடும் போது ஒற்றெழுத்துக்களை நீக்கியே கணக்கிடல் வேண்டும் என்ற முறைப்படி நேர் அசையில் ஒரே எழுத்தும் நிரை அசையில் இரண்டு எழுத்தும் உண்மை போதரும். |
ஒத்த நூற்பாக்கள் |
|
| `நேரசை ஒன்றே நிரைஅசை இரண்டுஅலகு ஆகும் என்ப அறிந்திசி னோரே.' நேர்ஓர் அலகு நிரைஇரண்டு அலகு நேர்பு மூன்றுஅலகு நிரைபுநான்கு அலகுஎன்று ஓதினார் புலவர் உணரு மாறே.' | | | - அவிநயம் | | |
| `தனிஅசை என்றா இணை அசை என்றா இரண்டென மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே.' | | | - காக்கை. | | |
| `நேரசை என்றா நிரைஅசை என்றா ஆயிரண்டு ஆகி அடங்குமன் அசையே. | | | - யா. வி. 5 | | |
| `நேர்நேர் நிரைநேராய் நேர்பு நிரைபடங்கும் சீர்மேல் அசைபலவாய்ச் சேருங்கால் - ஈரியல்பில் குற்றிபோல் குற்றிகரம் கொண்டியற்ற நேர்நிரையாய் முற்றி முடிந்து விடும்.' | | | | | |
| `நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் மேவ ஓடிய விடுவா ரும்முளர் நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ஆட்டுருப் போல ஒருவிரல் நேரே.' | | | | | |