பக்கம் எண் :

48

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `விரல்இடை யிட்டன அசைச்சீர் நாலசை
விரல்வரை யிடையினும் மானம் இல்லை.'
`விரல்இடை யிட்டன வாடரு வெடிவரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே.
 
 

- மயேச்சுவரம்

 
 

4

 

நேரசை நான்கும் நிரையசை நான்கும்
 

714. நெடிலும் குறிலும் தனித்தும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேர்அசை நான்கும் நீங்காக்
குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும்
நெறிவரு நிரைஅசை நான்கும் ஆகும்.
 
இது முற்கூறிய அசைகள் ஆமாறும் அவற்றின் எண்ணும் கூறுகின்றது.

     இ-ள்: நெட்டெழுத்துத் தனித்தும் குற்றெழுத்துத் தனித்தும் நெட்டெழுத்து ஒற்று
அடுத்தும் குற்றெழுத்து ஒற்று அடுத்தும் நடத்தலைப்பெறும் நேர் அசை நான்கும்,
விட்டு இசையாது குறில் இரண்டு தனித்தும், குறில் நெடில் இணைந்தும் குறில் இரண்டு
ஒற்று அடுத்தும் குறில் நெடில் ஆகிய இரண்டும் ஒற்று அடுத்தும் முறையானே வரும்
நிரைஅசை நான்கும்ஆம் எ-று.

     வழக்கின்கண் நேர்அசை நான்கற்கும் உதாரணம்: ஆ ழி வெள் வேல் எனவும்,
நிரைஅசை நான்கற்கும் உதாரணம் வெறி சுறா விளாம் எனவும், செய்யுட் கண்
நேர்அசை நான்கற்கும் உதாரணம்:

  `போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வோரே'
 
 

- யா. கா. 5 மே.

 
எனவும்,