பக்கம் எண் :

 

5

 

செய்யுளியல் - அமைப்பு

     பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல்,
செய்யுளியல், பாட்டியல், என்ற ஐந்து இயல்களைக் கொண்டதாக அமைத்துள்ள
ஆசிரியர், செய்யுளியலில் யாப்பருங்கல விருத்தி நூற்பாக்கள் பலவற்றை
உருமாற்றாமலும் சிறிது திரித்தும் கொண்டுள்ளார் எனினும், செய்யுளியல் அமைப்பைப்
பெரும்பான்மையும் யாப்பருங்கலக்காரிகையை ஒட்டியே கொண்டுள்ளார்,
எடுத்துக்காட்டுப் பாடல்களில் பெரும்பான்மையன யாப்பருங்கலக்காரிகையின்
எடுத்துக்காட்டுப் பாடல்களே.

     செய்யுள் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறும்
என்பதும், அவற்றான் ஆய செய்யுட்கள் பா எனவும் இனம் எனவும் இரு வகைப்படும்
என்பதும் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளன. பின் செய்யுள் உறுப்புக்களாகிய எழுத்து
முதலியவற்றின் இலக்கணம் பழைய நூற்பா ஒன்றனைக்கொண்டு நவிலப்படுகிறது.
எழுத்தின் இலக்கணம் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டது என்று மாட்டேற்றான்
நூற்பாவில் ஓதிய ஆசிரியர் எழுத்திலக்கணம் பற்றிய செய்திகளை இவ்யாப்பிற்கு ஏற்ப
உரையில் விரிவாக விளக்குகிறார்.

     அடுத்த நூற்பாவில் அசை, நேர் நிரை என இருவகைப்படும் என்று கூறிப் பின்
அடுத்த நூற்பாவில் நேரசை நான்கும் நிரையசை நான்கும் இவை என்பதனை
விளக்குகிறார்.

     சீர் இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர் என மூவகைப்படும் என்று கூறி அடுத்த
நூற்பாவில் சீர்கள் ஆமாற்றையும் அவற்றின்