பக்கம் எண் :

50

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `தனிக்குறில் முதல்அசை மொழிசிதைத்து ஆகாது.ழு  
 

- தொ.பொ. 319

 
  `ஒற்றெழுத் தியற்றே குற்றிய லுகரம்ழு.  
 

- தொ.பொ. 320

 
  `முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ
நிற்ற லின்றே ஈற்றடி மருங்கினும்.ழு
 
 

- தொ.பொ. 321

 
  `குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும்
ஒற்றொடு தோன்றி நிற்கவும் படுமே.ழு
 
 

- தொ.பொ. 322

 
  `நேர்நால் வகையும் நெறியுறக் கிளப்பின்,
நெடிலும் குறிலும் தனியே நிற்றலும்
அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும்
இவைதாம் நேர்அசைக்கு எழுத்தின் இயல்பே;
இணைக்குறில் குறில்நெடில் இணைந்தும்ஒற்று அடுத்தும்
நிலைக்குஉரி மரபின் நிரையசைக்கு எழுத்தே.ழு
 
 

 - சங்கயாப்பு

 
  `நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணையசை ஆகுதல் இலஎன மொழிப.ழு
 
 

- காக்கை

 
  `தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென்று
அந்நால் வகைத்தே நேரசை என்ப;
குறில்இணை குறில்நெடில் ஒற்றொடு வருதலென்று
அந்நால் வகைத்தே நிரையசை என்ப.ழு
 
 

 - நற்றத்தம்

 
  `குறில்நெடில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும்
குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் அசைநேர் நிரைஅசை நால்இரண்டே.ழு
 
 

 - பல்காயம்

 
  `நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேரசைத் தோற்றம்;
குறிலும் நெடிலும் குறில்முன் நிற்பவும்
நெறியின்ஒற்று அடுத்தும் நிரையசை யாகும்ழு.
 
 

- மயேச்சுரம்