பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 5

51

 
  `குறில்இணை ஆகியும் குறில்நெடில் ஆகியும்
ஒற்றொடு வந்தும் நிரைஅசை ஆகும்.'
 
 

- சிறுகாக்கை

 
  `குறிலும் நெடிலும் எனுமிவை நேரிசை; குற்றெழுத்துப்
பெறின்முன் இவையே நிரையசையாம்; பிழைப்பில்லை
பின்புஒற்று, இறினும்.'
 
 

- வீர. 107
 

 
  `நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே.'
 
 

- யா. வி. 6

 
  `குறில்இணை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்
நெறிமையின் நான்காய் வரும்நிரை அசையே.'
 
 

- யா. வி. 8

 
  `குறிலேநெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெரியேவரினும் நிறைந்துஒற்று அடுப்பினும் நேர்நிரை என்று
அறி; வேய்புரையும்மென் தோளி! உதாரணம்ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்தோய் விளாம்என்று வேண்டுவரே.'
 
 

 - யா. கா. 5

 
  `அசையே நேர்நிரை யாம்இரு வகைய;
நெடில்தனிக் குறில்மெய் நிகழ்குறி நேராம்;
இணைக்குறில் குறில்நெடில் இவைநிரை யசையே.'
 
 

- தொ. வி. 204

 
  `நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே.'
 
 

- மு. வீ. யா. 1

 
  `குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும்
நெறிமையின் நான்காய் வரும்நிரை அசையே.'
 
 

- மு. வீ. யா. 2

 
  `நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம்
ஆகும்நாற் சீரும் அகவற்கு உரிய.'
 
 

- மு. வீ. யா. 3