பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 6, 7

53

 
  `அசையே இரண்டும் மூன்றும் தத்தமில்
இசைய வருவன சீர்எனப் படுமே.'
 
 

- பல்காயம்

 
  `நாலசை யானும் நடைபெறும்; ஓரசை
சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே.'
 
 

- பல்காயம்

 
6

சீர்களின் வகையும் பாவிற்கு உரிமையும்
 

716.

ஈரசை கூடிய சீர்இயற் சீர்; அஃது
ஈரிரண்டு ஆம்அவை அகவற்கு இசைதலும்,
மூவசை கூடிய சீர்உரிச் சீர்; அது
நாலிரண்டு ஆகி நடைபெறும்; அவற்றுள்,
நேர்இறு நான்கும் வெள்ளை, அல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட்டு இடுதலும்,
நாலசை யானும், ஓரசை யானும்,
சீர்பெற நடப்பது பொதுச்சீர் ; ஆங்கு, அது
எண்ணிரண்டு, இரண்டாய், இயறலும், நெறியே.
 
     
இது முற்கூரிய சீர்கள் ஆமாறும் அவற்றது எண்ணும் அவை செய்யுட்கு உரியவாமாறும்
கூறுகின்றது.

     இ-ள் :   இரண்டு அசையான் வரும் சீர் இயற்சீர் எனப்படும். அது
நேர்நேர்ஆயும், நிரைநேர்ஆயும், நிரைநிரைஆயும், நேர்நிரைஆயும், தம்மில்கூட
நான்காம். அங்ஙனம் ஆகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீர் ஆதலும்; மூவசையான்
வரும் சீர் உரிச்சீர் எனப்படும். அது நேர்நேர்நேராயும், நிரைநேர்நேராயும்,
நிரைநிரைநேராயும், நேர்நிரைநேராயும், நேர்நேர்நிரையாயும், நிரைநேர்நிரையாயும்,
நிரைநிரைநிரையாயும், நேர்நிரைநிரையாயும் தம்மில்கூடி எட்டாகி நடக்கும்;
அவ்வெட்டனுள் நேர்ஈற்று உரிச்சீர் நான்கும் வெண்பா உரிச்சீர் ஆதலும், நிரைஈற்று
உரிச்சீர் நான்கும் வஞ்சி உரிச்சீர் ஆதலும் ;