செய்யுளியல் - நூற்பா எண் 7 | 55 | | வழக்கின்கண் ஆசிரிய உரிச்சீர்க்கு உதாரணம் தேமா புளிமா கருவிளம் கூவிளம் எனவும், வெண்பா உரிச்சீர்க்கு உதாரணம் தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் எனவும், வஞ்சி உரிச்சீர்க்கு உதாரணம் தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி எனவும், நாலசைச்சீர்க்கு உதாரணம் - தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ; தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ; தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்; தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல் எனவும், ஓரசைச் சீர்க்கு உதாரணம் நாள் மலர் எனவும், செய்யுட்கண் ஆசிரிய உரிச்சீர்க்கு உதாரணம்: | | `குன்றக் குறவன் காதல் மடமகள் வரைஅர மகளிர் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.ழு | | | - யா. கா. 9 மே. | | | | | எனவும், [குன்ற - தேமா; குறவன் - புளிமா; மடமகள் - கருவிளம்; சாயலள் - கூவிளம்] வெண்பா உரிச்சீர்க்கு உதாரணம்: | | `பொன்ஆர மார்பின் புனைகழல்கால் கிள்ளிபேர் உன்னேன்என்று ஊழ்உலக்கை பற்றினேற்கு - என்னோ மனனொடு வாய்எல்லாம் மல்குநீர் கோழிப் புனல்நாடன் பேரே வரும்ழு | | | - யா. கா. 9 மே, | | | எனவும், | | | |