பக்கம் எண் :

56

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
[பொன்ஆர - தேமாங்காய்; புனல்நாடன் - புளிமாங்காய்; புனைகழற் கால் -
கருவிளங்காய்; ஊழ்உலக்கை - கூவிளங்காய்.]

வஞ்சி உரிச்சீர்க்கு உதாரணம் :
  `பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்திரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயல்ஆர்ப்பவும் நாளும்
மகிழும் மகிழ்தூங்கு ஊரன்
புகழ்தல் ஆனாப் பெருவன் மையனே'.
 
 

-யா. கா. 9 மே.

 
எனவும்,

[பூந்தாமரை - தேமாங்கனி; வயற்கம்பலை - புளிமாங்கனி; வளவயலி டை -
கருவிளங்கனி; தேம்புனலிடை - கூவிளங்கனி]

நாலசைச் சீர்க்கு உதாரணம் :
 
`அங்கண்வானத் தமரரசரும - தேமாந்தண்பூ
வெங்களியானை வேல்வேந்தரும் - கூவிளந்தண்பூ
வடிவார்கூந்தல் மங்கையரும் - புளிமாந்தண்பூ
கடிமலர்ஏத்திக் கதழ்ந்திறைஞ்சச் - கருவிளந்தண்பூ
சிங்கம்சுமந்த மணிஅணைமிசைக் - தேமா நறும்பூ
கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச் - கூவிள நறும்பூ
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்- புளிமா நறும்பூ
முழுமதி புரையும் முக்குடைநிழல் - கருவிள நறும்பூ
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் - தேமா நறுநிழல்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப - கூவிள நறுநிழல்
அநந், த, சதுட்டயம் அவை எய்த - புளிமா நறுநிழல்
நனந்தலைஉலகுடன் நவைநீங்க - கருவிள நறுநிழல்
மந், த, மாருதம் மருங்கசைப்ப - தேமாந்தண்ணிழல்
அந்தரதுந்துபி நின்றியம்ப - கூவிளந்தண்ணிழல்