பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 7

59

 

 

`ஈரசைச்சீர் முன்பின் னாகவைத் துறழ்ந்து
மாறியக்கால் நாலசைச் சீர்பதி னாறாம்.
 
 

- அவிநயம்

 

 

`நாலசைச் சீரும் ஒரோவிடத்து இயலும்;
பாவொடு பாவினம் பயிறல் இன்றி.'
 
 

- பல்காயம்

 

 

`நேர்நிரை வரினே சீர்நிலை எய்தும்;
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.'
 
 

- அவிநயம்

 

 

`நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவழிக் கொளலும்
யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும்.'
 
 

- மயேச்சுரம்

 

 

`ஈரசை கூடிய சீர்இயற் சீர்; அவை
ஈரிரண்டு என்ப; இயல்புஉணர்ந் தோரே.'
 
 

 - யா. வி 11

 

 

`நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரைஎன்று
ஈரிரண்டு என்ப; இயற்சீர்த் தோற்றம்.'
 
 

- யா. வி. 11 மே

 

 

`மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கினும்
நேர்இறு நான்கும் வெள்ளை; அல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.'
 
 

 - யா. வி. 12

 

 

`நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.'  
 

 - யா. வி. 13

 

 

`ஓரசைச் சீரும்அஃது; ஓரிரு வகைத்தே.'  
 

 - யா. வி. 14

 

 

`ஈரசை நாற்சீர் அகவற் குரிய; வெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்; நிரை யாலிறுப
வாரசை மென்முலை மாதே! வகுத்தவஞ் சிக்குரிச்சீர்;
ஓரசை யேநின்றும் சீராம்; பொதுஒரு நாலசையே.'
 
 

- யா. கா. 6

 

 

`தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர்அகவற்கு
ஆமாம்; கடைகாய் அடையின்வெண் பாவிற்கு; அந்தங்கனியா
வாமாண் கலையல்குல் மாதே! வகுத்தவஞ் சிக்குரிச்சீர்;
நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம், நாள்மலரே.
 
 

 - யா. கா. 7