பக்கம் எண் :

6

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
எண்ணினையும் அவை செய்யுட்கு உரியவாமாற்றையும் விளக்கி, உரையில்
எடுத்துக்காட்டுக்களும் தருகிறார். பின் தளைவகை இத்துணைய என்று தெரிவிக்கும்
ஆசிரியர் அடுத்த நூற்பாவில் எழுவகைத் தளைகளையும் விளக்கி உரையில்
எடுத்துக்காட்டுக்கள் தந்து சிறப்புறச் செய்கிறார்.

     அடுத்து ஐவகை அடிகளின் பெயர்களும் குறிக்கப்படுகின்றன. பின் அவ்வடிகள்
அமையுமாறு விளக்கப்படுகிறது. அந்நூற்பா உரையுள் தேவையான எடுத்துக்காட்டுக்கள்
தரப்பெற்றுள்ளன.

     அடுத்த நூற்பாவில் அடிகள் பாக்களுக்கும் பா இனங்களுக்கும் உரியவாமாற்றை
விளக்கி உரையில் எடுத்துக்காட்டுக்களும் தருகிறார்.

     பின் மோனை முதலிய ஐவகைத் தொடையும் இணை முதலிய முப்பத்தைந்து
தொடை விகற்பங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. அடுத்த நூற்பாவில் மோனை
முதலிய ஐவகைத் தொடை இலக்கணமும், இணை முதலிய தொடை விகற்பங்களின்
இலக்கணமும் கூறும் ஆசிரியர் உரையில் வேண்டிய எடுத்துக்காட்டுக்களைக்
குறிப்பிட்டுள்ளார்.

     அடுத்த நூற்பாவில் அருகி வழங்குவனவும் விகற்பம் இல்லனவும் ஆகிய
செந்தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்பனவற்றைக் குறிப்பிடும்
ஆசிரியர், அதற்கு அடுத்த நூற்பாவில் அவற்றின் இலக்கணங்களை விளக்கிக்கூறி
எடுத்துக்காட்டும் தந்துள்ளார்.

     வெண்பா முதலிய பாக்கள் நான்கு என்று குறிப்பிடும் ஆசிரியர், அடுத்த
நூற்பாவில் பாவினம், தாழிசை, துறை, விருத்தம் என்ற மூன்று பகுப்பு உடைமையை
விளக்கியுள்ளார்.

     அடுத்து வெண்பாவின் ஓசையும் அமைப்பும் கூறப்படுகின்றன. உரையில்
நேர்அசை, நிரைஅசை, நேர்பசை, நிரைபசை, முற்றுகர