| `தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும்; இனிஅவற்றுள் கண்ணிய பூவினம் காய்ச்சீர் அனைய; கனியொடொக்கும் ஒண்ணிழற்சீர்; அசைச் சீர்இயற் சீர்ஒக்கும்;ஒண்தளைக்கே.' | | | - யா. கா. 8 | | |
| `நாலசை யால்நடைபெற்றன வஞ்சியுள், ஈரொன்று அணைதலும், ஏனுழி ஒன்றுசென்று ஆகலும், அந்தம் நிரையசை வந்தன, கூறிய வஞ்சிக்கு உரியன ஆதலும் ஆகும் என்ப அறிந்திசி னோரே.' | | | - காக்கை. யா. கா. 8 மே, | | |
| `குன்றக் குறவன் அகவல், பொன் னாரம்வெண் பாட்டு, வஞ்சிக்கு ஒன்றும் உதாரணம் பூந்தா மரைஎன்ப, ஓரசைச்சீர் நன்றறி வாரிற் கயவரும், பாலொடு நாலசைச்சீர்க்கு அன்றதென் னார், அள்ளற் பள்ளத்தினோ டங்கண் வானத்துமே.' | | | - யா. கா. 9 | | |
| `அசையிரண்டு ஒன்றின் முற்சீர்; மூவசை ஒன்றின்நேர் இறுவது இடைச்சீர்; நிரைஇறின்பிற்சீர் எனஇயம்பே.' | | | - வீ. சோ. யா. 1 | | |
| `கருவிளங் கூவிளம் தேமா புளிமா எனக்கலந்து, மருவிய நான்கு முதற்சீர்க ளாம்;மற் றவற்றினந்தத்து உருவமாம் காய்வரின் ஆம்இடைச்சீர்; ஒண் கனிவருமேல் செருவமர் வேற்கண்ணி னாய்! கடைச் சீரெனத் தேர்ந்தறியே.' | | | - வீர. யா. 2 | | |
| `நேரே நிரையே அசைச்சீர் இரண்டென நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை ஈரசை இயற்சீர் ஈரிரண்டு; இவற்றோடு ஈற்று நேர்நிரை இருநான்கு உரிச்சீர்; நேர்இறும் வெண்சீர் நிரைஇறும் வஞ்சிச்சீர் நாலசை பொதுச்சீர் நானான்கு என்ப.' | | | - தொ. வி. 204 | | |