பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 7, 8

61

 

 

`நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா,
நிரைநிரை கருவிளம், நேர்நிரை கூவிளம்,
ஆகுநாற் சீரும், அகவற் குரிய.`
 
 

 - மு. வீ. யா. 3

 

 

`ஈரசை நாற்சீர் ஈற்றினுள் நேரசை
விளைந்துகாய் எனவரல், வெண்பாக் குரிய.'
 
 

- மு. வீ. யா. 4

 

 

`நிரைஅசை அடைந்து கனிஎன நேர்வது,
வஞ்சிக்கு உரியவாம், வழுத்துங் காலே.'
 
 

- மு. வீ. யா. 4

 

 

`தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல்
புணர்ந்து வருவது, பொதுச்சீர் ஆகும்.'
 
 

- மு. வீ. யா. 6

 

 

`ஓரசை நின்றும் சீரா கும்மே.'  
 

 - மு. வீ. யா. 7

 

தளையின் பொதுவகை
 

717.

தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும்
என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையே.
 
     
இது நிறுத்த முறையானே தளைவகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : தன் சீர் இறுதி தன் வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றுதலும்
ஒன்றாமையும் என இருவகைப்படும் மேற்கூறிய தளை என்றவாறு.
(8)

விளக்கம்

  நிறுத்த முறை - செய்யுளியல் முதல் நூற்பா.  
     
     முதல் சீரின் ஈற்றசை நேர் அல்லது நிரையாக இருக்க, வருஞ்சீரின் முதல் அசை
நேர் அல்லது நிரையாக அமையப் பொருந்துவதே ஒன்றுதலாம். முதல் சீரின் ஈற்றசை
நேர் அல்லது நிரையாக இருக்க வருஞ்சீரின் முதல்அசை மாறியிருப்பின்
ஒன்றாமையாகும்.