62 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | ஒத்த நூற்பாக்கள் | | `செயற்குஉரி இருசீர் செய்யுள் நடப்புழி தலைப்பெய நிற்பது, தளையெனப் படுமே.ழு `நின்ற சீர்ஈற் றொடுவருஞ் சீர்முதல் ஒன்றுதல் ஒன்றாது ஆகுதல் தனையே.ழு `நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள -- நின்றால், வளையொன்று முன்கையாய்! வந்தன நூலோர் தளையென்று கட்டுரைப்பர் தாம்.ழு | | | | 8 | | எழுவகைத்தளைகள் | 718. | நேர்நேர் ஒன்றல் நிரைநிரை ஒன்றல்என்று ஆயிரு தளையும் அகவற்கு இயைதலும், வெண்சீர் ஒன்றல் இயற்சீர் விகற்பம்என்று அவ்விரு தளையும் வெள்ளைக்கு அமைதலும், நிரைஈற்று உரிச்சீர் ஒன்றலும் உறழ்தலும் வரையாது வருதல் வஞ்சிக்கு வருதலும், வெண்சீர் விகற்பம் கலித்தளை ஆதலும், பண்பினின் வழாஅப் பாங்கின என்ப. | | | | | | இது முற்கூறிய தளைகள் ஆமாறும் அவற்றது எண்ணும் அவை செய்யுட்கு உரிய ஆமாறும் கூறுகின்றது. இ-ள் : நேர் ஈற்று இயற்சீர்முன் நேர் வந்து ஒன்றுவது ஆகிய நேர் ஒன்று ஆசிரியத்தளையும், நிரை ஈற்று இயற்சீர் முன் நிரை வந்து ஒன்றுவது ஆகிய நிரை ஒன்று ஆசிரியத்தளையும் என அவ்விரண்டுதளையும் ஆசிரியப்பாவுக்கு உரியவாதலும். | |
|
|