பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 9

65

 

ஒன்றிய வஞ்சித்தளையானும் ஒன்றாத வஞ்சித்தளை யானும்
வந்த செய்யுள் :

 

`மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாள்மலர்மிசை
என ஆங்கு
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனம்மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும்,

[வெண்சாமரை - நேர்நேர்நிரை - தேமாங்கனி ; புடை பெயர்தர - நிரைநிரைநிரை -
கருவிளங்கனி ; கனிமுன்நிரை வருதலின் ஒன்றிய வஞ்சித்தளை. மந்தாநிலம்
வந்தசைப்ப - கனிமுன் நேர் வருதலின் ஒன்றாத வஞ்சித்தளை.]

கலித்தளையான் வந்த செய்யுள் :

  `செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி,
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்,
எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்,
மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும்,

[செல்வப்போர் - நேர்நேர்நேர் - தேமாங்காய்; கதக்கண்ணன் - நிரைநேர்நேர் -
காய்முன் நிரை வருதலின் கலித்தளை.]
நாலசைச்சீர் உரிச்சீரே போலத் தளைவகை எய்திய செய்யுள் :
  `அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணிஅணைமிசைக்