பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 9

67

 

விளக்கம்

 

மாமுன் நேர்வரின் நேர்ஒன்று ஆசிரியத்தளை.
விளம்முன் நிரைவரின் நிரைஒன்று ஆசிரியத்தளை.
மாமுன்நிரையும் விளம்முன் நேரும்வரின் இயற்சீர் வெண்டளை.
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை.
காய்முன் நிரைவரின் கலித்தளை.
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சித்தளை.
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சித்தளை.
 
     
     நாலசைச் சீர்கள் எல்லாம் மூவசைச் சீர்கள் போலக் கொள்ளப்பட்டுப் பூக்கள்
காய்களாகவும், நிழல்கள் கனிகளாகவும் அமைந்தாற் போலத் தளை அறுக்கப்படும்.

     ஓர் அசைச் சீர்களாகிய நேர் நிரை என்பனவற்றை நேர்நேர் போலவும்
நிரைநிரை போலவும் கொள்ளுதல் வேண்டும்.

ஒத்த நூற்பாக்கள்

  `இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதற்பெயர் ஆசிரி யத்தளை யாகும்.'
 
 

- காக்கை

 
  `ஈரசை இயற்சீர் ஒன்றியது எல்லாம்
ஆசரி யத்தளை என்மனார் புலவர்'
 
 

 - மயேச்சுரம்

 
  `இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப நடையது வெண்சீர் ஆகும்'.
 
 

- காக்கை

 
  `உரிச்சீர் அதனுள் உரைத்தமை அன்றிக்
கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே.'
 
 

- காக்கை

 
  `நேரீற்று நேர்வரின் வெண்டளை யாகும் ; அந்
நேரீற் றியல்பின் நிரைவரின் - ஓரும்,
கலித்தளையாம்; பால்வகையால் வஞ்சித் தளையாம்;
நிரைவரினும் நாலசைச்சீர்க் கண்.'