பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 9

69

 

 

`ஈரசைச்சீர் தாமுரிய ஆசிரியச் சீர்க்கென்றும்
நேரீற் ரியற்பின் நிரைவருங்கால் - ஓரும்
கலித்தளையாம் என்க, அக வற்சீர் கலியின்
ஒலிக்கியையா என்றுரைக்கும் ஓத்து.'
 
     

 

`வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்,
என்றிரண்டு என்ப வெண்டளைக்கு இயல்பே.'
 
 

- யா. வி. 18

 

 

`ஈரசைச் சீர்நின்று இனிவரும் சீரொடு
நேரசை ஒன்றல் நிரையசை - ஒன்றலென்று
ஆயிரு வகைத்தே ஆசிரியத் தளையே.'
 
 

 - யா. வி. 19

 

 

`தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின்
வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்.'
 
 

- யா. வி. 21

 

 

`நிரையீறு இல்லா உரிச்சீர் முன்னர்,
நிரைவரு காலை கலித்தளை ஆகும்.'
 
 

- யா. வி. 20

 

 

`தண்சீர் தனதொன்றின் தன்றளை யாம், தண வா வஞ்சி
வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து, வல் லோர்வகுத்த
வெண்சீர் விகற்பம் கலித்தளை யாய்விடும், வெண்டளையாம்
ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும்; ஒண்ணுதலே.'
 
 

- யா. கா. 10

 

 

`திருமழை உள்ளார் அகவல், சிலைவிலங்கு ஆகும் வெள்ளை,
மருளறு வஞ்சி மந் தாநிலம் வந்து, மை தீர்கலியின்
தெரிவுறு பந்தம்நல் லாய்! செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப,
உரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக்கு தாரணமே.'
 
 

- யா. கா. 11

 
  `பொதுச்சீர் இறுதியும் உரிச்சீர் இறுதியும்
தளைக்குஒக்கும்; அசைச்சீர் இயற்சீர் அனைத்தே;
பொதுச்சீர் வெள்ளையுள் புணரா உக்குறள்;
அல்லன கலியும் அகவலும் சேரா;
வஞ்சியும் அனைத்தும் வரினும் ஓரடி
எல்லையும் ஒன்றுமேல் இணையின் தொடரா.'
 
 

- தொ. வி. 206