பக்கம் எண் :

70

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`தளையாம் சீர்தமுள் தளைப்படும் கட்டே
அவைஏழ் வகைய ஆகும்; அவற்றுள்,
ஆசிரியத் தளையாம் இயற்சீர் ஒன்றல்.ழு
 
 

- தொ. வி. 207

 

 

`வெண்டளை என்ப வெண்சீர் ஒன்றலும்
இயற்சீர் விகற்பமும் என இரு வகைத்தே.ழு
 
 

- தொ. வி. 208

 

 

`கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே.ழு  
 

- தொ. வி. 209

 

 

`வஞ்சித் தளையாம் வஞ்சிக்குஉரிச்சீர்
ஒன்றலும் ஒன்றாது ஒழுகலும் என்ப.ழு
 
 

 - தொ. வி. 210

 

 

`மாமுன் நேர்நேர் ஒன்றிய அகவல்
தளையாம்; விளமுன் நிரைநிரை ஒன்றிய
அகவல் தளையாம்; ஆயுங் காலே.ழு
 
 

- மு. வீ. யா. 9

 

 

`காய்முன் நேரே வெண்சீர் வெண்டளை;
மாமுன் நிரையும் விளமுன் நேரும்
இயற்சீர் வெண்டளை, என்மனார் புலவர்.ழு
 
 

- மு. வீ. யா. 8

 

 

`கனிமுன் நேர்ஒன் றாதவஞ் சித்தளை;
ஒன்றிய தளைநிரை வரினா கும்மே.ழு
 
 

- மு. வீ. யா. 10

 

 

`காய்முன் நிரைவரின் கலித்தளை ஆகும்.ழு  
 

- மு. வீ. யா. 11

 

 

`பொதுச்சீர்ப் பூக்காய் ஆகும்; நிழல்கனி
ஆகும்; என்மனார் அறிந்திசி னோரே.ழு
 
 

- மு. வீ. யா. 12

 

 

`அகவற் சீரற் றாகும்ஓ ரசைச்சீர்.ழு  
 

- மு. வீ. யா. 13

9

ஐவகை அடிகள்

719.

குறள்அடி சிந்துஅடி அளவு அடி நெடில்அடி
கழிநெடில் அடிஎன அடிஐந்து ஆகும்.
 
     
     இது நிறுத்தமுறையானே அடிவகை இத்துணைத்து என்கின்றது.