என்றும், முத்தளையான் வந்த அடியினை அளவடி என்றும், நால்தளையான் வந்த அடியினை நெடிலடி என்றும், ஐந்தளையான் வந்த அடியினையும் அறுதளையான் வந்த அடியினையும், எழுதளையான் வந்த அடியினையும் இவற்றின் மிக்க தளையான் வந்த சிறப்பு இல்லா அடியினையும் கழிநெடிலடி என்றும் கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
| `இரண்டு முதலா எட்டுஈ றாகத் திரண்ட சீரான் அடிமுடிவு உடைய, இறந்தன வந்து நிறைந்துஅடி முடியினும் சிறந்த அல்ல, செய்யுள் உள்ளே' | | | | | |
என்றார் பிறரும் எனக் கொள்க. |
குறள் அடியான் வந்த செய்யுள் : |
[இருசீர் அடி] |
| `திரைத்த சாலிகை நிரைத்த போல்நிறைந்து இரைப்ப தேன்களே விரைக்கொள் மாலையாய்' | | | யா. கா. 13 மே; சூளா. சீய, 172 | | |
எனவும், |
சிந்தடியான் வந்த செய்யுள் : |
[முச்சீர் அடி] |
| `இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேல்துறக் கத்தினோடு அரிது வேற்றுமை ஆகவே கருது வேல்தடக் கையினாய்' | | | - யா. கா. 13 மே; சூளா. சீய. 170 | | |
எனவும், |
அளவடியான் வந்த செய்யுள் : |
[நாற்சீர் அடி] |
| `தேம்பழுத்து இனியநீர் மூன்றும் தீம்பலா மேம்பழுத்து அளிந்தன சுளையும் வேரியும் | | | | | |
|