பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 11

73

 

 

மாம்பழக் கனிகளும் மதுத்தண்டு ஈட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே'
 
 

- யா. கா. 13 மே; சூளா. நகர. 14

 
எனவும்,

நெடிலடியான் வந்த செய்யுள் :

[ஐஞ்சீர் அடி]

 

`வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழும் சுடர்சூழ்ஒளி மூர்த்தி ஆகி
நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்.'
 
 

யா. கா. 13 மே; சூளா. கடவுள் வாழ்த்து

 
எனவும்,

ஐந்தளையான் வந்த கழிநெடிலடிக்குச் செய்யுள் :

[அறுசீர் அடி]

 

`இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர்ந்து
      இனவண்டு புடைசூழ
நுரைக்கள் என்னுமக் குழம்புகள் திகழ்ந்தெழ
         நுடங்கிய இலயத்தால்
திரைக்க ரங்களில் செழுமலைச் சந்தனத்
         திரள்களைக் கரைமேல்வைத்(து)
அரைக்கும் மற்றிது குணகடல் திரையொடும்
         பொருதலது அவியாதே.'
 
 

- யா. கா. 13 மே; சூளா. கல். 51

 
எனவும்,

அறுதளையான் வந்த கழிநெடிலடிக்குச் செய்யுள் :

[எழுசீர் அடி]

 

`கணிகொண்டு அலர்ந்த நறவேங்கை யோடு
       கமழ்கின்ற காந்தள் இதழால்
அணிகொண்டு அலர்ந்த வனமாலை சூடி
      அகில்ஆவி குஞ்சி கமழ
மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து
      வரைஆகம் மீது திவளத்
துணிகொண்டு இலங்கு சுடர்வேலி னோடு
      வருவான்இது என்கொல் துணிவே.'
 
 

- யா. கா. 13 மே; சூள. அர. 197

 
எனவும்,