எழுதளையான் வந்த கழிநெடிலடிக்குச் செய்யுள் : |
[எண்சீர் அடி] |
| `மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண மூதுலகம் மூடிஎழில் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழல் சுடரோயுன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து புலங்கொளா வால்;எமக்கெம் புண்ணியர்தம் கோவே.' | | | - யா. கா. 13 மே; சூளா. துறவு. 64 | | |
எனவும், |
எண்தளையான் வந்த கழிநெடில் அடிக்குச் செய்யுள் : |
[ஒன்பதுசீர் அடி] |
| `இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த தானையை இலங்கும் ஆழியின் விலங்கியோள் முடங்கு வால்உளை மடங்கல் மீமிசை முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் வடங்கொள் மென்முலை நுடங்கு நுண்இடை மடந்தை சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன் தடங்கொள் தாமரை இடங்கொள் சேவடி தலைக்குவைப்பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே.' | | | - யா. கா. 13 மே; சூளா. துறவு. 164 | | |
எனவும், |
ஒன்பதிற்றுத் தளையான் வந்த கழிநெடில் அடிக்குச் செய்யுள் : |
[பதின்சீர் அடி] |
| `கொங்கு தங்கு கோதைஓதி மாதரோடு கூடும் நீடும் ஓடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத நாத ! என்று நின்று தாழ | | | | | |
|